Showing posts with label தமாசு. Show all posts
Showing posts with label தமாசு. Show all posts

Tuesday, March 20, 2007

நூதன முறையில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம்

கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூருவில் இந்த காவேரி பிரச்சினை வந்ததுக்கு அப்புறம் இந்த கர்நாடக மக்கள் என்னென்னவோ வழிகளில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அவங்க எதிர்ப்பை தெரிவிச்சுகிட்டு இருக்காங்க.சாலை மறியல், ரயில் நிறுத்தம் ,உண்ணாவிரதம்,கடை அடைப்பு இப்படி பல வழிகளில் போராட்டம் பண்ணியும் அவங்க எதிர்ப்பை சரியா காட்டலையோனு நெனச்சுட்டாங்களோ என்னவோ இப்ப ஒரு புது முறையில இந்த எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி இருக்காங்க.ஆனால் இந்த முறை இது நிச்சயமா தமிழர்களை மட்டும் இல்லாமல் அனைத்துப் பிரிவு மக்களையும் பாதிக்கிற விதமா இருக்கு.


கேபிள் டிவியில தமிழ் சானல்களை தடை செய்தும் , கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் செய்யாமலும் கூட தமிழர்களின் உறுதியை குலைக்க முடியாத கர்நாடக மக்கள் கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்திருக்கிறாங்க.என்னனு கேக்கறீங்களா?.போன வாரம் நெறய சினிமா தியேட்ர்களில் ஒரே நேரத்துல "வீராச்சாமி " படத்தை ரிலீஸ் செஞ்சு இருக்காங்க.வேற எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத நெலமையிலே தெரியாம இதைப் போய் பார்க்குற மக்கள் எங்களுக்கு காவேரி தண்ணியே வேண்டாம் தயவு செஞ்சு இந்த படத்தை மட்டும் பாக்க சொல்லாதீங்க அப்படீனு கதறி அழுவுறாங்களாம்.








இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு பயங்கர ஆயுதத்தை கையில் எடுத்து போராடுவதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் சேர்த்து கன்னட மக்களும் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு எதிர் போராட்டம் செய்யலாமா அப்படினு யோசிச்சுகிட்டு இருக்கேன்.பெங்களூரு மக்கள் யாராவது சப்போர்ட்டுக்கு வர்றீங்களா?.

டிஸ்கி :- இது ஒரு மொக்கை பதிவு.இதை ஏண்டா பதிவோட ஆரம்பத்துலயே சொல்லலைனு கேக்காதீங்க. அப்புறம் யாரு பதிவை படிப்பா?.துப்புறவங்க எல்லாம் தாராளமா துப்பிட்டு போகலாம்.

Tuesday, February 27, 2007

நடிகை மும்தாஜுக்கு வீரச்செயல்களுக்கான விருது


தற்போது கிடைத்த தகவலின்படி நடிகை மும்தாஜுக்கு இந்திய அரசின் வீரச்செயல்களுக்கான விருதினை சிறப்பு தகுதியில் வழங்கும்படி தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிறப்புக்காட்சியாக ""வீராச்சாமி" படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் விஜய T(terror??) ராஜேந்தர்.முதல்வர் படம் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டதாக தகவல்(தகவல் உபயம்: ஜுனியர் விகடன் மிஸ்டர் மியாவ்).


இப்பொழுதுதான் படம் பார்த்த அதிர்ச்சியில் இருந்து (படத்தில் விஜய T. ராஜேந்தரை பார்த்த அதிர்ச்சியில் இருந்து ) மீண்ட முதல்வர் உடனடியாக மன்மோகன் சிங்குக்கு தொலைபேசி, இந்த படத்தில் ராஜேந்தருடன் ஜோடியாக நடிக்கின்ற அளவுக்கு தைரியம் உள்ள மும்தாஜுக்கு வீரச்செயல்களுக்கான இருப்பதிலேயே உயர்ந்த விருதை குடுக்க மறுத்தால், மத்தியஅரசுக்கு குடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக சொல்லி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்.


நாமும் நமது சார்பில் மும்தாஜுக்கு வீரச்செயல் புரிந்ததற்கு நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Thursday, February 22, 2007

பேரரசு --The Terror




நெறய தமிழ் பட போஸ்டர்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க " இந்த பொங்கல்/தீபாவளிக்கு மிரட்ட வருகிறது " அப்படின்னு போட்டு படம் பேரு போட்டிருக்கும். ஆனா ஒரு படத்தோட டைரக்டர் பேரை கேட்டாலே அவனவன் மெரண்டு ஓடுறான்னா அந்தப் பெருமை நம்ம "பெருந்தொந்தரவு" பேரரசுக்கு மட்டும்தான். இவரோட முதல் படம் "திருப்பாச்சி" -க்கு நானும் நண்பன் ஹரியும் ஈரோடு அபிராமி தியேட்டருக்கு பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு நைட் ஷோ போய் உக்காந்தோம். இது நடந்தது ஒரு ரெண்டு வருசம் முன்னாடி.படத்துல முதல் ரெண்டு மூணு சீன் பாத்தவுடனேயே எங்களுக்கு நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்னு தெரிஞ்சிடுச்சு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு படத்துல சாமிக்கு ரெண்டு மூணு ஆடுங்கள பலி குடுக்கற சீன் வந்தது.எனக்கு என்னமோ அங்க ஆட்டு மூஞ்சிக்கு பதிலா ஹரியோட முகமும்,என்னோட முகமும் தான் தெரியுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு "ரைட்ரா , இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடலாம்னு " முடிவு பண்ணிட்டு ரெடி ஆயிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளைய தளபதி முகத்துல சந்தனம் குங்குமம் பூசி அடையாளம் மாறுகிற சீன் வந்தப்போ எங்களால தாங்க முடியல. "சூப்பரப்பு"அப்படினு சொல்லிக்கிட்டு நல்லா கை தட்டி கெக்கே பிக்கேனு விழுந்து சிரிச்சுட்டு சுத்திப் பார்த்தா எல்லோரும் எங்களை ஒரு மாதிரி கொலை வெறியோட பார்க்குறானுங்க. "நண்பா, இடம், பொருள் ,நேரம் தெரியாம காமெடி பண்ணிட்டமோ" அப்படீனுட்டு அதுக்கு அப்புறம் ரொம்ப உஷாரா இருந்தோம்.A/C வேற நிறுத்திட்டானுங்க. அந்தக் கடுப்பு வேற.கொஞ்ச நேரம் கழிச்சு ஹரி ஆரம்பிச்சுட்டான். ஸ்கிரீன்ல படம் ஓடுறப்பவே இங்க கீழே திரை விமர்சனம் பண்ணி கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டு இருந்தான்.பாட்டெல்லாம் வேற "கீரைக்கட்டு, பக்கெட்டு, டிக்கெட்டு, ராக்கெட்டு" னு ரொம்ப இலக்கியத்தரமா இருந்ததுனால ஒண்ணும் முடியலை எங்களாலே.ஏதோ கும்பிடப்போன தெய்வம் தலைவி (Ex-தலைவி??) த்ரிஷா அப்பப்போ வெயிலுக்கு வேப்பங்காத்தா ( என்ன உவமை!. த்ரிஷாவை நினைச்சாலே பொங்கிட்டு வருது ) வந்து எங்களை காப்பாத்துனாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணுனதுதான்,இனி பேரரசு பக்கம் தலை வச்சு கூட படுக்கறது இல்லைனு.

ஆனா,நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க ஆச்சே.அந்த படத்தையும் ஓட வச்சுட்டாங்க.நம்ம பேரரசுவும் கலைத்தாயை குரல்வளையை நெரிச்சுக் கொல்லாம விடுறது இல்லைங்கற முடிவோட அடுத்து மீண்டும் இளைய தளபதிய(அநேகமா இவரையும் அடுத்து ஹிட் லிஸ்ட்-ல சேர்த்தணும்னு நினைக்கிறேன்) வச்சு "சிவகாசி " படம் ,அதுவும் தீபாவளிக்கு. அந்த வருசத்துல இருந்து பொங்கல்,தீபாவளி வந்தாலே எங்க இந்த பேரரசு பய ஏதாவது படம் ரிலீஸ் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு. இந்த படத்துல பேரரசு நடிச்சது மட்டும் இல்லாம இவருக்கு பன்ச் டயலாக் வேற.சீட்டுக்கு அடியிலே லக்ஷ்மி வெடி வெடிசச effect-லதான் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க. " உங்கம்மா எங்கம்மா நம்மை சேர்த்து வைப்பாளா, சும்மா அட சும்மா நம்மை பெத்து விட்டாளா" அப்படினு பெற்றோர்களின் கடமையை விளக்கு வைத்து வெளிச்சம் போட்டு காட்டும் பாட்டு இந்த படத்தோட சிறப்பு அம்சம்.




இதுக்கு அடுத்து நம்ம "தல" அஜீத் தெரியாம இவரை நம்பி "திருப்பதி " படம் குடுத்துட்டார்.இவரோ "தல"ய "தறுதல" ஆக்கிட்டார் இந்த படத்துல.இவரு ஏறக்குறைய ஹீரோ மாதிரி(உவ்வே சொல்லவே குமட்டிகிட்டு வருது) நடிச்சு அஜீத்தை காமெடியன் ஆக்கிட்டார்.இந்த படம் பார்த்த பீதியிலே, பேதி ஆகித்தான் பாலா "நான் கடவுள்" படத்துல இருந்து அஜீத்தை தூக்கிட்டதா ஒரு பேச்சு.

இதுக்கு அடுத்து நடந்ததுதான் பெஸ்ட் காமெடி.அடுத்த படம் "தர்மபுரி" அதுவும் யாரு கேப்டன் விஜயகாந்தை வச்சு. "சனி தனியா வந்தாலே சமாளிக்க முடியாது.இங்க துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டு வருதே"னு எங்களுக்கு கண்ணெல்லாம் இருண்டுடுச்சு.ஆனா இந்த படம் கேப்டனோட அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையா அமைஞ்சது.இனி இவன விட்டா இது மாதிரி நிறைய படம் நடிச்சு நம்மளை கொன்னுடுவான்னு மக்கள் உஷாராகி பேசாம இவரை M.L.A ஆக்கிட்டா படத்துல நடிக்க மாட்டார் நம்ம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி வோட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க.இந்த உண்மை புரியாம கேப்டன் இப்பவும் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் "என் அரசியல் வாழ்க்கையை தூக்கி விட்டதே தம்பி பேரரசுதான்னு கண்ணு கலங்கி சொல்லிக்கிட்டு இருக்காரு.

நம்ம ஆளை பத்தி இன்னும் நெறய சொல்லிக்கிட்டே போகலாம்.ஏதோ இப்போ தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சுதாரிச்சு கொஞ்ச நாளா இவர் படம் எதுவும் வராம நாட்டுல அமைதி நிலவுது.இருந்தாலும் இவர் கலைச்சேவை என்னோட வேற ஒரு பதிவுல சொன்ன மாதிரி "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" லெவல்ல நடந்துகிட்டுதான் இருக்கு. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பேரரசு படம்னா அந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் சூடம் காட்டி, தேங்காய் ஒடச்சு, பெரிய கும்பிடா போட்டுட்டு அப்படியே ஓடியே போயிடுங்க.மீறி படம் பாக்க போனா உங்க உயிருக்கோ,மனநல,குணநல மாறுதல்களுக்கோ யாரும் உததரவாதம் இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு தோப்பு!!

தலைப்பை தப்பா எழுதிட்டானோன்னு நினைக்காதீங்க.சரியாதான் இருக்கு. ஏதோ ஒரு புது படத்துல சொன்ன மாதிரி " ஒண்ணு வாங்கினா அது ஆப்பு வரிசையா வாங்கிக்கிட்டே இருந்தா அது தோப்பு". ஆஸ்திரேலியாவை பத்து நாளைக்கு முன்னாடி இங்கிலாந்துகாரங்க அசிங்கப்படுத்திட்டு போனா இந்த வாரம் நியூசிலாந்துகாரனுங்க குனிய வச்சு கும்மியே அடிச்சுட்டானுங்க. மூணு மாட்ச் வரிசையா ஜெயிச்சு chappel-hadlee series ஜெயிச்சுட்டாங்க.அதுவும் முந்தா நேத்து நடந்த மூணாவது மாட்ச்-ல ஜெயிக்கறதுக்கு 347 அடிக்கணும்னு ஆரம்பிச்சு நியூசிலாந்து 41/4 இருந்தாங்க.இதே நிலைமைல நம்ம இந்தியன் டீம் இருந்திருந்தா எதிரணி பாஸ்ட் பவுலர் வந்து "அண்ணாச்சி, பவுண்டரி லைன்ல இருந்த் மாங்கு மாங்குனு ஓடி வந்து போடறேனே,என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?.ஒரு ரன்னாவது அடிங்க.இல்லை பந்தையாவது தொடுங்க.இப்படி பேட்டை கொண்டு போய் முதுகுக்குப் பின்னாடி சொருகிகிட்டு நின்னா நல்லாவா இருக்கு?" அப்படின்னு காலை பிடிச்சு கெஞ்சற அளவுக்கு மட்டை போட்டிருப்பானுங்க.ஆனா நியூசிலாந்துகாரனுங்க கருப்பு சட்டை போட்ட எங்க ஊரு கருப்பசாமி மாதிரி பேயாட்டம் ஆடிட்டானுங்க. பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்குது. இன்னைக்கு TV -ல ஹைலைட்ஸ் பார்த்தேன். ஆனா மேட்சே ஹைலைட்ஸ் மாதிரி தான் நடந்திருக்கு. கடைசியா 3 பந்து மிச்சம்
இருக்குறப்ப ஜெயிச்சுட்டானுங்க. நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங்கை கையிலே பிடிக்க முடியலை. "உஸ்ஸ் அப்பா எத்தனை மாட்ச்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்குறது " அப்படின்னு தலைவர் கைப்புள்ள ரேஞ்சுக்கு காலரை தூக்கி விட்டுகிட்டு திரியறார்.ஆனா ஆஸ்திரேலியா கேப்டன் ஹஸ்ஸி நெலமைதான் பாவம். ஓரமா குந்தி உக்காந்து "நான் என்னடா தப்பு பண்ணுனேன்?.ஏதோ ரிக்கி பாண்டிங் ரெஸ்ட்ல இருந்ததுனால தெரியாம கேப்டன் ஆயிட்டேன்.அது ஒரு குததமா?.ஏண்டா இந்த பச்சபுள்ளைய போட்டு இந்த அடி அடிச்சீங்க?.சின்னபுள்ள தனமா 336,346 எல்லாம் சேஸ் பண்ணுனா நாங்க எவ்வளவுதாண்டா ரன் அடிக்கிறது?"ன்னு ஒரே அழுவாச்சி.அதுவும் இல்லாம ஸ்டீபன் ப்ளெமிங்கை கப் வாங்குறப்போ போய் அவர் சட்டைய புடிச்சு "இங்க பாரு ,அடி வாங்குனது நானு,கப் எனக்குத்தான்"னு தகராறு
வேற. ஆஸ்திரேலியா கோச் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டே" ன்னு பேயடிச்ச மாதிரி உக்காந்து இருந்தாரு.






எப்படியோ இந்த உலகக் கோப்பைல நெறய காமெடி நடக்கப்போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது.நம்ம இந்தியன் டீம் நெலமை எப்படி இருக்கப்போகுதுன்னுதான் தெரியலை. "இந்தியாவுக்கு கப்பா? ஆப்பா?"னு ஒரு ஸ்பெசல் ப்ரோக்ராம் நம்ம மந்திரா பேடியோட சேர்ந்து(ஹி.. ஹி.. ) செய்ய நான் ரெடி.யாராவது ஸ்பான்சர் பண்றீங்களா?.

Sunday, January 14, 2007

கல்யாணம் ஆனா சிங்கம் நிலைமையும் இதுதான்


நம்மளோட கல்யாணமான நண்பர்கள் சில பேர் நாங்க எல்லாம் சிங்கம்னு சொல்லிட்டு திரியுறாங்க.அவங்க சிங்கம் இல்லை அசிங்கம்னு எங்களுக்கு தெரியும்.சிங்கமா இருந்தாலும் கல்யாணம் ஆனா இப்படித்தான் நிக்கணும்னு படம் போட்டு காட்டுறாங்க இவங்க ரெண்டு பேரும்.

பிரம்மச்சாரி சிங்கங்கள் எல்லாம் பார்த்து சூதானமா இருந்துக்கங்கப்பா .

Monday, December 18, 2006

இதுக்கெல்லாமா strike பண்ணுவாங்க?.

போன வாரம் செய்திதாள்ல பெங்களூர்ல ஆட்டோ ஓட்டுநர்களெல்லாம் வேலை நிறுத்தம் செஞ்சதா ஒரு செய்தி.என்ன விஷயம்னு

பார்த்தா Transport regulatory authority-ல இருந்து ஒரு எட்டு நிபந்தனை போட்டுருக்காங்க.அவை கீழ் கண்டவாறு :

1)ஆட்டோ நிறுத்தங்களில் வரிசையில் நிறுத்த வேண்டும்(Maintain queue in auto stands).
2)ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறைந்த பட்ச தூரத்தில் செல்ல வேண்டும் (take the shortest route)
3)மீட்டர் அளவே பணம் வாங்க வேண்டும்(Get the legal fare only)
4)பயணத்தின் போது நடுவில் மற்ற ஆட்களை ஏற்றி செல்ல கூடாது(When a passenger is inside you should not

accomodate a third party on sharing basis)
5)அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் (Should have all the proper documents)
6)புதிய வண்டிக்கான உரிமை சான்றுகளை 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்
7)தகுந்த காரமின்றி பயணி கூப்பிடும் இடத்திற்கு வர முடியாது என்று மறுக்கக் கூடாது (Should not deny to go with

the passenger without "valid reasons")
8)மறந்து போச்சு-பா


இதை படித்தவுடன் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை.இது எல்லாம் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு வேண்டிய அடிப்படை

விசயங்கள் தானே?.இதுக்கு எதுக்கு சட்டம் போடணும்.அதை எதிர்த்து இவங்க எதுக்கு strike பண்ணனும்?.

ஏதோ ஒரு படத்துல விவேக் ஒரு காமெடி பண்ணுவார்.அவர் எங்கியோ போறப்ப இதே மாதிரி ஒரு strike நடக்கும்.என்னானு

விசாரிச்சா ஒரு காவல் துறை அதிகாரி சொல்லுவார் "நடை பாதை வியாபாரிகள் அவங்க கடை எல்லாம் எடுக்க சொன்னதுக்கு

strike பண்றாங்க"

விவேக் கேப்பாரு "நடைபாதை இருக்கறதே மக்கள் நடக்கத் தானே.அதுல கடை போடலாமா"னு
அதுக்கு நம்ம காவல் துறை அதிகாரி "நீ அடி வாங்கி சாக போறேன்னு" சொல்லுவார்

இந்த auto drivers கதையும் அது போலத்தானே இருக்கு.

நம்ம கணினி பொறியாளர்கள் ஏன் இதே போல் கீழ் கண்ட காரணங்களுக்காக strike பண்ண கூடாது

1) தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய சொல்வது
2) எந்த company canteen-லும் சரியான சாப்பாடு போடாதது
3) ஒரு சில நிறுவனங்களில் நல்ல பிகரே இல்லாமை.அப்படியே இருந்தாலும் எல்லாம் பக்கத்து team அல்லது பக்கத்து floor

போய் விடுவது
4)Annual vacation விடாமல் இருப்பது
5)அப்புறம் மிக முக்கியமாக சரியாக சம்பளம் கொடுக்காமல் இருப்பது (சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம்-பா)


இன்னும் இது போல சொல்லிக்கிட்டே போகலாம் .இது பத்தி நல்லா யோசிச்சு ஒரு முடிவு பண்ணனும்.உங்களுக்கும் strike

பண்ண இன்னும் வேறு ஏதாவது காரணம் இருந்தா சொல்லுங்க