Thursday, February 22, 2007

ஆஸ்திரேலியாவுக்கு தோப்பு!!

தலைப்பை தப்பா எழுதிட்டானோன்னு நினைக்காதீங்க.சரியாதான் இருக்கு. ஏதோ ஒரு புது படத்துல சொன்ன மாதிரி " ஒண்ணு வாங்கினா அது ஆப்பு வரிசையா வாங்கிக்கிட்டே இருந்தா அது தோப்பு". ஆஸ்திரேலியாவை பத்து நாளைக்கு முன்னாடி இங்கிலாந்துகாரங்க அசிங்கப்படுத்திட்டு போனா இந்த வாரம் நியூசிலாந்துகாரனுங்க குனிய வச்சு கும்மியே அடிச்சுட்டானுங்க. மூணு மாட்ச் வரிசையா ஜெயிச்சு chappel-hadlee series ஜெயிச்சுட்டாங்க.அதுவும் முந்தா நேத்து நடந்த மூணாவது மாட்ச்-ல ஜெயிக்கறதுக்கு 347 அடிக்கணும்னு ஆரம்பிச்சு நியூசிலாந்து 41/4 இருந்தாங்க.இதே நிலைமைல நம்ம இந்தியன் டீம் இருந்திருந்தா எதிரணி பாஸ்ட் பவுலர் வந்து "அண்ணாச்சி, பவுண்டரி லைன்ல இருந்த் மாங்கு மாங்குனு ஓடி வந்து போடறேனே,என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?.ஒரு ரன்னாவது அடிங்க.இல்லை பந்தையாவது தொடுங்க.இப்படி பேட்டை கொண்டு போய் முதுகுக்குப் பின்னாடி சொருகிகிட்டு நின்னா நல்லாவா இருக்கு?" அப்படின்னு காலை பிடிச்சு கெஞ்சற அளவுக்கு மட்டை போட்டிருப்பானுங்க.ஆனா நியூசிலாந்துகாரனுங்க கருப்பு சட்டை போட்ட எங்க ஊரு கருப்பசாமி மாதிரி பேயாட்டம் ஆடிட்டானுங்க. பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்குது. இன்னைக்கு TV -ல ஹைலைட்ஸ் பார்த்தேன். ஆனா மேட்சே ஹைலைட்ஸ் மாதிரி தான் நடந்திருக்கு. கடைசியா 3 பந்து மிச்சம்
இருக்குறப்ப ஜெயிச்சுட்டானுங்க. நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங்கை கையிலே பிடிக்க முடியலை. "உஸ்ஸ் அப்பா எத்தனை மாட்ச்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்குறது " அப்படின்னு தலைவர் கைப்புள்ள ரேஞ்சுக்கு காலரை தூக்கி விட்டுகிட்டு திரியறார்.ஆனா ஆஸ்திரேலியா கேப்டன் ஹஸ்ஸி நெலமைதான் பாவம். ஓரமா குந்தி உக்காந்து "நான் என்னடா தப்பு பண்ணுனேன்?.ஏதோ ரிக்கி பாண்டிங் ரெஸ்ட்ல இருந்ததுனால தெரியாம கேப்டன் ஆயிட்டேன்.அது ஒரு குததமா?.ஏண்டா இந்த பச்சபுள்ளைய போட்டு இந்த அடி அடிச்சீங்க?.சின்னபுள்ள தனமா 336,346 எல்லாம் சேஸ் பண்ணுனா நாங்க எவ்வளவுதாண்டா ரன் அடிக்கிறது?"ன்னு ஒரே அழுவாச்சி.அதுவும் இல்லாம ஸ்டீபன் ப்ளெமிங்கை கப் வாங்குறப்போ போய் அவர் சட்டைய புடிச்சு "இங்க பாரு ,அடி வாங்குனது நானு,கப் எனக்குத்தான்"னு தகராறு
வேற. ஆஸ்திரேலியா கோச் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டே" ன்னு பேயடிச்ச மாதிரி உக்காந்து இருந்தாரு.






எப்படியோ இந்த உலகக் கோப்பைல நெறய காமெடி நடக்கப்போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது.நம்ம இந்தியன் டீம் நெலமை எப்படி இருக்கப்போகுதுன்னுதான் தெரியலை. "இந்தியாவுக்கு கப்பா? ஆப்பா?"னு ஒரு ஸ்பெசல் ப்ரோக்ராம் நம்ம மந்திரா பேடியோட சேர்ந்து(ஹி.. ஹி.. ) செய்ய நான் ரெடி.யாராவது ஸ்பான்சர் பண்றீங்களா?.

0 comments: