Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Tuesday, March 13, 2007

உலகக் கோப்பை திருவிழா


இன்னைக்கு ஒன்பதாவது கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் துவங்குது.எப்பவும் போல இல்லாமல் இந்தத் தடவை 16 அணிகள் துவக்க சுற்றில் ஆடுகின்றன.இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்ற 10 அணிகள் தவிர புதிதாக 6 அணிகளும் விளையாடுகின்றன(Bermuda, canada, kenya, ireland, netharlands, scotland).இது வரை நடந்த உலகக் கோப்பைகளில் இதுவே அதிகபட்ச அணிகள் பங்கு பெரும் போட்டியாகவும்,மிக அதிக பட்ச போட்டிகள் நடைபெறும் போட்டியாகவும்(ஏறக்குறைய 50+ போட்டிகள் ) இருக்கப்போகுது.உலகில் அதிகபட்ச ரசிகர்களை கொண்டதும் அதிக நாடுகள் விளையாடும் கால்பந்து உலக கோப்பை கூட இத்தனை நாள் நடக்கறதில்லை.


இதில முதல் சுற்று போட்டிகளில் மிகப்பல போட்டிகளின் முடிவுகள் அநேகமா இப்பவே ஒரு மாதிரி தெரிஞ்சதுதான் .இந்த புதுசா விளையாடுற டீம்கள் நிலைமைதான் ரொம்ப கஸ்டம்.இந்த பெரிய டீம்களேல்லாம் அவங்களை விருந்தாகி இவங்க விழா பார்த்துருவாங்க. மைதானததுல எறங்குறப்பவே TV-ல பார்க்குற மாதிரி கூடி நின்னு கும்மி அடிக்கிறப்ப (Huddle talk) "மக்களே ,நமக்கு இன்னைக்கு நல்லதா ஒரு கோழி கெடச்சு இருக்கு. அதுவும் வெளிநாட்டு வெடக் கோழியா கெடச்சிருக்கு. பொறுமையா மசாலா தடவி நல்ல பதமா வறுக்கணும். என்ன ? "இது வரைக்கும் ஒரு ரெக்கார்டும் வைக்கலையேனு கவலைப்படுறவன் எல்லாம் இன்னைக்கு வச்சுருங்க.நல்ல சந்தர்ப்பம். "போனா வராது திரும்ப கெடைக்காது "அப்படின்னு ஊரில கடைத்தெருவுல கூவி சொல்ற மாதிரி சந்தோசமா சொல்லிட்டுத்தான் எறங்குறததே.எப்பவாவது இந்த சின்ன டீம் பசங்க நம்மளை அடிச்சு கெளப்பீறுவானுங்க.அப்பவெல்லம் "வீரனுக்கு இதெல்லாம் ஜகஜம் " அப்படினு நம்ம தலைவர் கைப்புள்ளே மாதிரி சொல்லிக்கிட்டு வர வேண்டியதுதான்.


சொல்லப்போனா ரெண்டாவது சுற்றுல இந்த சூப்பர்-8 வந்ததுக்கு அப்புறம்தான் உண்மையான உலக கோப்பை தொடங்குறதே.அநேகமா நம்ம குழுவுல இந்தியாவும், இளங்கயும் சூப்பர்-8 போயிடும்னு நினைக்கிறேன்.நம்ம பசங்க நல்ல சமநிலை(Balanced) உள்ள டீமாத்தான் போயிருக்காங்க.நம்ம "தலை" சச்சின் ," வங்கப்புலி" கங்குலி , "திரு.சுவரு" (Mr.Wall ..ஹி ஹி) திராவிட், அப்புறம் நம்ம சூழல் பந்து வீச்சாளர்கள் எல்லாம் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்.முக்கியமா கடைசி உலகக்கோப்பை விளையாடப் போற தலை சச்சினும் , வங்கப்புலி கங்குலியும்.

ஒரு மாசம் முன்னாடி ஆஸ்திரேலியாதான் உலக கோப்பை ஜெயிக்கும் அப்படீங்கற நிலமை இருந்தது இப்போ வரிசையா வாங்கின ஆப்புகளால் ஆஸ்திரேலியா நொந்து நூடுல்ஸா போய் இருக்குறதுனால செளத் ஆப்ரிக்கா , இந்தியா , அப்புறம் நியுசிலாந்து இவங்களுக்கும் நல்ல சான்ஸ் இருக்கும் போல தெரியுது.சொந்த மைதானத்துல விளையாடுறதால வெஸ்ட் இண்டிஸ் அணிக்கும் கொஞ்சம் சான்ஸ் இருக்கு.

போட்டிகள் எல்லாம் நம்ம இந்திய நேரத்துல முன்னிரவு தொடங்கி பின்னிரவு(நள்ளிரவு?!) வரை இருக்குறதுனால இங்க நெறய பெருக்கு காலச்சக்கரமே மாறிடும்(என்னை மாதிரி ஆளுங்களுக்கு கேக்கவே வேணாம்). பள்ளி,கல்லூரி படிக்கிறவங்க , அப்புறம் அவங்க பெற்றோர் நிலைமைதான் ரொம்ப கஸ்டம். பசங்களா, TV எல்லாம் பார்க்காம ஒழுங்கா நல்லபடியா படிக்கிற வழியை பாருங்க(டேய் உன் அப்பா,அம்மா இப்படி எத்தனை தடவை சொல்லி இருப்பாங்க.என்னைக்காவது கேட்டுருப்பியாய? நீயெல்லாம் தயவு செஞ்சு கருத்து சொல்லாதேனு யாரும் சொல்லப்படாது)



இதுதான் இந்த உலகக் கோப்பையின் Mascot Mello




இது போட்டி அட்டவணை




இந்த தடவை நம்ம பசங்க ஜெயிச்சு வரணும்னு எல்லோரும் வேண்டிக்கிட்டு , திருவிழாவில கலந்துப்போம் வாங்க.

Sunday, January 14, 2007

பொங்கலோ பொங்கல்!!


தமிழ் கூறும் நல்லுலகத்து மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Sunday, December 31, 2006

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த புத்தாண்டுக்கு ஏதாவது சபதம்(resolution-தான்) செய்யலாம்னு யோசிச்சேன்.அப்புறம் நல்லா யோசிச்சு பார்த்தா நம்ம வாழ்க்கை நல்லா சந்தோசமாத்தான் போகுது.இது வரைக்கும் பெருசா ஒரு தொல்லையும் இல்லை.நம்மளோட இந்த வாழ்க்கை முறை,இந்த பழக்க வழக்கம் எல்லாம் இது வரைக்கும் நம்மள நல்லாதானே வச்சிருக்கு அப்புறம் எதுக்கு இதை மாத்திக்கிட்டுனு அப்படியே விட்டுட்டேன்.(சோம்பேறிததனத்தை இப்படியும் சொல்லலாம்).நீங்களும் என்னை மாதிரி நல்ல பழக்க வழக்கங்களை கத்துக்கிட்டு என்னை மாதிரி நல்ல பையனா இருங்க.

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.