Friday, July 25, 2008

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு விபரங்கள்

பெங்களூருவில் இன்று 4 இடங்களில் மதியம் 1.30 மணியில் இருந்து 12 நிமிட இடைவெளியில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.இன்னும் இரண்டு இடங்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்து உள்ளதாக செய்திகள் இருப்பினும் அவை உறுதி செய்யப்படவில்லை.மடிவாலா பேருந்து நிறுத்தம், அடுகோடி, ஆனேபாளயா,நந்தனஹள்ளி,ராஜாராம் மோஹநன் ராய் சர்க்கிள், ரிச்‌மண்ட்சர்க்கிள் அருகில் மற்றும் ஷ்யாம் நகர் இடங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து உள்ளன.இதில் 3 பேர் உயிர் இழந்தாதாக தகவல் (செய்திகளில் சொன்னாலும் இது இன்னும் உறுதி செய்யப் படவில்லை) .மற்றும் 20 பேர் தீவிர காயங்களுடன் St.ஜான்ஸ் மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் மடிவாலா,அடுகோடி மற்றும் ரிச்‌மண்ட்சர்க்கிள் போன்றன நகரத்தின் மைய இடங்களில் இருப்பது மட்டுமன்றி மக்கள் அதிகம் புழங்கும் இடங்களும் ஆகும்.தெய்வாதீனமாக வெடித்த குண்டுகள் வீரியம் குறைந்த வகைகளை சேர்ந்தவையாக இருந்தன.அநேகமாக ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.காவல் துறை,bomb ஸ்க்வாட் மோப்ப நாய்களுடன் தடயங்களுக்காக இப்பொழுதே குண்டு வெடிப்பு இடங்களில் காணப்படுகிறார்கள்.நகரத்தின் தொலை பேசி இணைப்புகள் மற்றும் அலைபேசி அலைவரிசைகளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர் விசாரிப்புகளால் நிரம்பியுள்ளன.இப்பொழுது கிடைத்துள்ள தகவல்கள் இவையே.

கணிணி துறையில் முண்ணணியில் இருப்பதும்,தென்னிந்தியாவின் அமைதியான நகரங்களில் ஒன்றுமான பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகள் வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் இறந்த மற்றும் காயமடைந்த அனைத்து நபர்களுக்கும் எமது இரங்கல்கள்.