Thursday, February 15, 2007

கெளம்பிட்டாய்ங்கைய்யா கெளம்பிட்டாய்ங்க



நேத்தே இந்த பதிவு போடணும்னு நெனச்சேன்.ஆனா நம்மதான் ஜமுக்காள சோம்பேறிங்க ஆச்சே.அதுதான் இன்னைக்கு போடும்படி ஆயிடுச்சு.

இது நாம:

FEB 14 காதலர் தினமாம்.இதெல்லாம் ஒரு பொழப்பானு இவனுங்களை பார்த்து கேக்கலாம்னு நெனக்கிறேன்.அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு.அதை விட்டுப்புட்டு இதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி அதை கொண்டாடுறானுங்க. கூட்டம் கூட்டமா ஜோடி போட்டுட்டு நம்ம வயித்தெரிச்சலை கிளப்புறதுக்கு கெளம்பிடறானுங்க.ஒரு ரோஜா பூ விலை 30 ரூபாயாம்.என்ன கொடுமை சரவணன் இது?. எந்த ஒரு காதலன்/காதலிக்கு தங்களது ஜோடிகளை பார்த்த நாளோ இல்லைனா அவங்ககிட்ட காதல் சொல்லி அதை ஏற்றுக் கொண்ட நாளோ வேணா அவங்களுக்கு முக்கியமான நாளா இருக்கலாம்.அதை கொண்டாடுறதுல ஒரு நியாயம் இருக்கு. அது எப்படி ஒரு குறிப்பிட்ட நாளை பொதுவா வச்சு அதை காதலர் தினமா கொண்டாடலாம்.உலகத்துல கல்யாணம் ஆனவங்க எல்லோரும் ஒரே நாளுல Anniversary கொண்டாடாமுடியுமா?.(சே என்ன ஒரு லாஜிக்.பின்றியேடா). அதுவும் St.Valentine ஒரு சாமியார்.அவர் காதல் செஞ்சதாவும் தெரியலை.அவர் பேருல இதை கொண்டாடுறதுக்கு ஒரு சரியான காரணமும் இல்லை.இதெல்லாம் மேற்கத்திய கலாசாரத்தின் தேவை இல்லாத பாதிப்பு.பூக்கள்,பரிசு பொருள்கள்,வாழ்த்து அட்டைகள் இதெல்லாம் விக்கிறவங்க நெறைய விக்கிறதுக்கு செய்யுற வியாபார தந்திரம். இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது.இருந்தாலும் சமூக நாகரீகம் கருதி அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன்.வேணும்னா PKS கமல் மாதிரி எல்லோரும் அவங்க மனசுக்கு பிடிச்சசவங்களை காதலிச்சு,கல்யாணம் பண்ணிக்கிட்டு ,குழந்தைகள் எல்லாம் நல்லா படிச்சு வேற வேற நாட்டுல வேலைக்கு போகறேன்னு அடம் பிடிக்கிறப்போ எல்லா நாடு consulate வாசல்லயும் வெயில்ல கெடந்து கஷ்டப்படுங்கண்ணு வஞ்ச புகழ்ச்சி திட்டு வேணும்னாலும் குடுக்கறேன்.நல்லா இருங்க.

இது நம்ம மனசாட்சி:

டேய் டேய் அது எப்படிடா நல்லவன் மாதிரியே ஆக்ட் குடுக்கறீங்க?.ரோட்ல ஒரு பிள்ளைய போக விடுறதுல்ல.மொறச்சு மொறச்சு பார்க்குறது. மாசத்துக்கு ஒரு நடிகைக்கு ரசிகர் மன்றம் வைக்கிறது.இதுல டயலாக் வேற."நாய்க்கு வேலை இல்லை ஆனா நின்னு பேச நேரம் இல்லை"-ங்கற மாதிரி ஒரு பிள்ளையும் உன்னை பார்க்கலைங்கற உண்மையை மறைக்க தம் கட்டி பக்கம் பக்கமா அடுத்தவனை குத்தம் சொல்லி blog எழுத வேண்டியது.என்னா வில்லத்தனம்!.போடா போடா போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.

இது நாம:

அட விடு மனசாட்சி.இதெல்லாம் நமக்கு புதுசா என்ன. நாம நாலு பேரை திட்டுறதுதான்.நாலு பேரு நம்மளை ரொம்ப அசிங்கமா திட்டுறதுதான்.பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம்.அதோ அந்த பக்கம் சூப்பரா ஒரு பொண்ணு போகுது பார்.அதை கவனிப்போம்.வுடு ஜூட்.

இது நம்ம மனசாட்சி:


ஆஹா கெளம்பிட்டான்ய்யா கெளம்பிட்டான்.

4 comments:

said...

//வருத்தப்படாத வாலிபன்.
வாழ்க்கையில் சிரித்துக் கொண்டே இருக்க விரும்பும் இளைஞன்(?!) .சமகால சமூக அவலங்களால் அது முடியாமல் அவ்வப் போது கோபப்படுபவன். பொறியாளன் படிப்பு.பொட்டி தட்டும் பொழைப்பு (ஆணி பிடுங்குவதில் ஸ்பெஷலிஸ்ட்).தற்போது பெங்களுருவில் வாசம்.//

நீங்க யாரு, எவருங்கற மேட்டர் புரிஞ்சிடுச்சு தல!

said...

ஹ ஹா ஹா
சரிதான் ;)

said...

//நீங்க யாரு, எவருங்கற மேட்டர் புரிஞ்சிடுச்சு தல!//

இத வெளியில சொல்லிடாதீங்கப்பு.:-)

said...

//ஹ ஹா ஹா
சரிதான் ;)//

நன்றி srishiv.