Saturday, January 13, 2007

கணினி பொறியாளர்கள் இளிச்சவாயர்களா ?

Bangalore -ல் தினம் காலை செய்தி தாள் திறந்தால் மூன்றாம் பக்கத்தில் இது போல் ஒரு செய்தி நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் "software engineer robbed ". சமீப காலங்ககளாக தினம் இது போன்ற கணினி பொறியாளர் கொள்ளை அடிககப்பட்டார் என்ற செய்தியுடன் கணினி பொறியாளர் தாக்கப்பட்டார் மற்றும் கணினி பொறியாளர் கொலை செய்யப்பட்டார் போன்ற செய்திகளும் சர்வ சாதாரணமாக வருகின்றன. மறு தினம் இந்த செய்தி மறக்கப்பட்டு விடுகிறது.தினம் தினம் இந்த கொள்ளைகள் நடந்தாலும் கண்டு கொள்வோர் யாருமில்லை.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.நகரத்தின் பிற பகுதிகளில் மற்ற பிறருக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதை பெரிது படுத்தும் செய்தி ஊடகங்கள் கூட இதை பெரிது படுத்துவது இல்லை.கணினி பொறியாளர்கள் கொள்ளையர்களுக்கு சுலபமான குறிகள்(soft target) ஆகிவிட்டார்களா ?.என் நண்பர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களில் இருந்து காவலர்களும் கணினி பொறியாளர் என்றாலே நிறைய பணம் கறக்கலாம்,இல்லை எனில் "நீ சொன்னவுடனே எல்லாம் செய்யமுடியாது,எங்களுக்கு நெறய வேலை இருக்கு" போன்ற மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்களே தவிர உதவி செய்யும் நோக்கம் கொஞ்சம் கம்மியாகத்தான் உள்ளது.


இதற்கு சில அறிவு ஜீவிகள் கணினி பொறியாளர்களிடமும் சில தவறுகள் உள்ளதாக சொல்கிறார்கள்.உதாரணமாக wallet -ல் நிறைய பணம் வைத்திருப்பதாகவும்,நிறைய பண மதிப்புள்ள செல்பேசி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.இதை எப்படி எடுத்து கொள்வது?.எனக்கு எவ்வளவு செலவுக்கு பணம் வேண்டுமோ அதை வைத்து கொள்வது என் சௌகரியம்.செல்பேசியும் அப்படியே.சரி பணம் நெறய வேண்டாம் கார்ட் வைத்து கொள்ளலாம் என்றாள் PIN number கேட்டு நூதனமாக கொள்ளை அடிக்கிறார்கள்.ராத்திரியில் தனியாக வருவதால் இந்த பிரச்சினை என்றால் நமது வேலை சில சமயம் அப்படி வேண்டுகிறது.பணம் நிறைய வைத்து கொண்டு ,card வைத்து கொண்டு நடு ராத்திரியில் வேறு profession -ல் இருப்பவர்கள் யாரும் வருவதில்லயா?.அவர்கள் எல்லாம் பத்திரமாக சென்று வருகிறார்களே.அது எப்படி? கணினி பொறியாளர்கள் மீதான இது போன்ற தாக்குதல்களுக்கு என்ன தீர்வு இருக்க முடியும் ,இதை எப்படி தடுக்கலாம்?.நண்பர்களும் அன்பர்களும் சொல்ல முடியுமா?.

0 comments: