Wednesday, May 02, 2007

சூழலின் சுழல்


ஜன்னலுக்கு வெளியே மழை
உதட்டில் பட்டுத் தெறித்த
ஒரு துளி ஈரம்

வலைக்கம்பியில் தொற்றிய
ஈர்ப்பு நீர்த்திவலைகள்

உடல் தோலை குறுகுறுத்த
ஈரக்காற்றின் குளிர்வு

மேகங்கள் மேற்கொண்ட
உயிர்ப்புள்ள தேடல்கள்

வாடையின் அரவணைப்பில்
பசுமரங்கள் சிலிர்க்கும்
சித்திரங்கள்

சூழலின் சுழலுக்குள்
சிக்கிய மனசு

தூண்டிலிட்டது கவிதை எழுத! .

4 comments:

nenjil said...

nalla kavithai....


jannulukka veliye malai...

ayyo thuniya ennum edukkala...

pappa child care a irunthu vanthiruppala...

kudaiye kondu varala duty mudiyarthukulla ninuruma...

veetla jannala mudinoma ellia...

eppalam malaikku odane iduthan thonuthu...

Anonymous said...

அழகாய் இருக்கிறது..

நேசமுடன்..
-நித்தியா

ஸ்ரீமதன் said...

//அழகாய் இருக்கிறது..

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நித்தியா.

ஸ்ரீமதன் said...

//nalla kavithai....

ayyo thuniya ennum edukkala...

pappa child care a irunthu vanthiruppala...//

நீங்கள் ஒரு சிறந்த குடும்பத்தலைவியாகிக் கொண்டு இருக்கிறீர்கள்.

:-).வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி lost.