கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூருவில் இந்த காவேரி பிரச்சினை வந்ததுக்கு அப்புறம் இந்த கர்நாடக மக்கள் என்னென்னவோ வழிகளில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அவங்க எதிர்ப்பை தெரிவிச்சுகிட்டு இருக்காங்க.சாலை மறியல், ரயில் நிறுத்தம் ,உண்ணாவிரதம்,கடை அடைப்பு இப்படி பல வழிகளில் போராட்டம் பண்ணியும் அவங்க எதிர்ப்பை சரியா காட்டலையோனு நெனச்சுட்டாங்களோ என்னவோ இப்ப ஒரு புது முறையில இந்த எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி இருக்காங்க.ஆனால் இந்த முறை இது நிச்சயமா தமிழர்களை மட்டும் இல்லாமல் அனைத்துப் பிரிவு மக்களையும் பாதிக்கிற விதமா இருக்கு.
கேபிள் டிவியில தமிழ் சானல்களை தடை செய்தும் , கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் செய்யாமலும் கூட தமிழர்களின் உறுதியை குலைக்க முடியாத கர்நாடக மக்கள் கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்திருக்கிறாங்க.என்னனு கேக்கறீங்களா?.போன வாரம் நெறய சினிமா தியேட்ர்களில் ஒரே நேரத்துல "வீராச்சாமி " படத்தை ரிலீஸ் செஞ்சு இருக்காங்க.வேற எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத நெலமையிலே தெரியாம இதைப் போய் பார்க்குற மக்கள் எங்களுக்கு காவேரி தண்ணியே வேண்டாம் தயவு செஞ்சு இந்த படத்தை மட்டும் பாக்க சொல்லாதீங்க அப்படீனு கதறி அழுவுறாங்களாம்.
இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு பயங்கர ஆயுதத்தை கையில் எடுத்து போராடுவதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் சேர்த்து கன்னட மக்களும் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு எதிர் போராட்டம் செய்யலாமா அப்படினு யோசிச்சுகிட்டு இருக்கேன்.பெங்களூரு மக்கள் யாராவது சப்போர்ட்டுக்கு வர்றீங்களா?.
டிஸ்கி :- இது ஒரு மொக்கை பதிவு.இதை ஏண்டா பதிவோட ஆரம்பத்துலயே சொல்லலைனு கேக்காதீங்க. அப்புறம் யாரு பதிவை படிப்பா?.துப்புறவங்க எல்லாம் தாராளமா துப்பிட்டு போகலாம்.
Tuesday, March 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அடப் பாவிகளா!
தமிழர்களை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?
எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு சொல்லுங்க, என்னோட புராஜக்ட் மேனேஜருக்கு குடும்பத்தோட டிக்கட் எடுத்து தந்துடுறேன்.
Why not use him to flush out terrorists in Kashmir or even US marines from Iraq?
வீராச்சாமி பார்க்கும்போது எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம். ஏனென்று தெரியவேண்டுமா? மேலே வருத்தப்படாத வாலிபனின் ஸ்லோகனை பார்க்கவும்.
ஆவி அம்மணி,pranni,cosmic voices மற்றும் நாகு அனைவருக்கும் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.comment moderation செய்திருந்ததை மறந்து போனதால் reply செய்ய நீண்ட நாட்களாகி விட்டது.
Post a Comment