பெங்களுரில் சென்ற வாரம் மஞ்சு என்கிற 5 வயது குழந்தை தெருநாய்களால் கடிபட்டு இறந்துவிட்டான். அது பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவும் போட்டு விட்டேன்.அது பற்றி வந்த அறிக்கைகளில் ஒரு மிருகநல ஆர்வலர் இந்த தெருநாய்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று எழுதி இருந்தார்.ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் தெருநாய்களுக்கு, தேவையான உணவை விடவும் கம்மியான அளவு உணவு கிடைக்கும் பொழுது அவைகளுக்கு உணவு தேடுவதில் போட்டி இருக்கும் (பிரின்ஸிப்பிள் ஆப் சர்வைவலாம். கிரகம்). அதனால் நாய்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஒன்றை ஒன்று எதிரி மனப்பான்மையில் பார்க்கும். ஆனால் பெங்களுர் போன்ற பெருநகரங்களில், தற்போது இருக்கும் டேக்-அவே உணவு பழக்த்தினால் , மிச்சப்படுத்தப்பட்ட நிறைய உணவுகள் அப்படியே குப்பையில் கொட்டபபட்டு விடுகின்றது. இதனால் நாய்களுக்கு அவைகளுக்கு தேவையானதை விட அதிக உணவு கஷ்டப்படாமல் கிடைக்கிறது( இது டிமாண்ட் அண்ட் சப்ளை). இதனால் நாய்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை ஒழிந்து கூட்ட மனப்பான்மை(Pack mentality) வளர்ந்து வருகிறது . இந்த கூட்ட மனப்பான்மை அவைகளுக்கு தனி வலிமையயும் ,ஆக்ரோஷத்தையும் கொடுக்கிறது.இதில் இந்த கூட்டத்தின் தலைமை நாய் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும் பொழுது இது போன்று "விபத்துகள்" (சிறுவனின் மரணம்) நடக்கின்றன.
அதனால் ,நாய்களை இது போன்று கூட்டம் சேர விடாமல் செய்தால் அவைகள் அமைதியாக இருக்கும்.இது போன்ற விபத்துகளை நடக்காமல் தவிர்த்து விடலாம் என்று யோசனை சொல்லி உள்ளார். ஆஹா என்ன ஒரு யோசனை! , மாநகராட்சியில் இருந்து சிறப்புப்படை அமைத்து கூட்டம் சேரும் நாய்களிடம் சென்று "இங்க பாருங்க இப்படி எல்லாம் கூட்டம் போடக் கூடாது,அது உங்களுக்கும் ஆபத்து,எங்களுக்கும் ஆபத்து.அதனால எல்லோரும் அப்படியே கலைஞ்சு தனித்தனியா போய் உங்க வேலையப் பாருங்க" அப்படினு சொன்னா என்னமா இருக்கும்?.
ரூம் போட்டு உக்காந்து இது மாதிரி எல்லாம் யோசிப்பாய்ங்களோ?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இங்கனே திரியிற நாய்களையெல்லாம் எப்போதான் பிடிக்கப்போறாயங்களோ தெரியலை....
ரோட்டுலே நிம்மதியா போகமுடியலை... அதைவிட போனவாரம் ஆன அந்த சம்பவம் பெரிய கொடுமை... :(
ஆமாம் ராம் . பெங்களூரில் 70,000 நாய்கள் இருக்கிறதா கணக்கு சொல்லி இருக்காங்க. அதுங்க எல்லாம் நம்மளை பாத்து பயந்தது போய் இப்ப நம்ம அதுங்களை பார்த்து பயபப்டவேண்டி இருக்கு.
naaya paathu bayanthu bayanthu ellaroda pozhappum naay pozhappa ayidum polirukku...
இந்தியாவில் இப்படியான கோணங்கித் தனமான பதில் கூறும் மிருகாமிமானிகள் அதிகம்; இவர்கள்
மோடி கூறியது போல் "கக்கூசு கழுவுவது கடவுளுக்குச் செய்யும் சேவையென அதைச் செய்வோர்
எண்ண வேண்டுமாம்"
இந்தப் பாணியில் அவர்கள் பதில் இருக்கும்; இந்தச் சிறுவன் நிச்சயம் உயர் வர்க்கம் அல்ல.
அதுவும் ஒரு காரணம்.
சினிமாவில் நடிக்கும் மிருகங்களை சரியாகக் கவனிக்கிறார்களா? என அவதானிக்க அமலாவின்
புழூ குறஸ் பக்கத்தில் இருந்து அவதானிக்கும்; ஆனால் சினிமாவில் எத்தனையோ பேர் ஒவ்வொரு கணமும் சீரளித்து தெருவுக்கு வருகிறார்கள். அதைக் கவனிக்க ஆள் இல்லை.
இந்தியா எங்கோ போய் விட்டது; நாம் அந்த இடத்தில் நிற்கிறோம்; இதுவே உண்மை.
Johan
@sha
உங்கள் ஆதங்கமே எனதும் .பின்னூட்டத்துக்கு நன்றி .
Post a Comment