Wednesday, December 20, 2006

கடைசியில ஜெயிச்சிட்டாங்கப்பா

எப்படியோ நம்ம பசங்க கடைசியா south africa-வுல ஒரு மாட்ச் ஜெயிச்சிட்டாங்கப்பா.அதுவும் நெறய சமயம் போல திக்கி திணறி ஜெயிக்காம ரொம்ப நல்லா விளையாடி ஜெயிச்சிருக்காங்க.இந்த ஸ்ரீசாந்த் பய அப்பப்போ நெறய scene போட்டாலும் இந்த மாட்ச்-ல அதுவும் பர்ஸ்ட் இன்னிங்ஸ்-ல செம பெளலிங்.என்ன swing and seam position.பட்டைய கிளப்பிட்டான்.அதை விட முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ரெண்டு பேர் வங்கப் புலி கங்குலி-யும் நம்ம லக்ஷ்மனும் தான்.பர்ஸ்ட் இன்னிங்ஸ்-ல புலி பட்டைய கெளப்பிட்டாரு.ரெண்டாவது இன்னிங்ஸ்-ல லக்ஷ்மண் ஒரு டெஸ்ட் மாட்ச்-ல எப்படி ரொம்ப பொறுப்பா விளையாடணும்னு சொல்லாம விளையாடி காட்டிட்டார்.

ஆனா team-ல இன்னும் ஒரு மாற்றம் கொண்டு வந்தா நமக்கு இன்னும் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்னு நம்புகிறேன்.அது
Sehwag மற்றும் Jafferரெண்டு பேரையும் தூக்கிட்டு pathan,harbajan ரெண்டு பேரையும் team-ல கொண்டு வந்து
opening batsman ஆக போட்டுடலாம்.எப்படியும் நம்ம பந்து வீச்சாளர்கள் எல்லாம் நம்ம துவக்க மட்டையாளர்களை விட நெறய ரன் அடிக்கிறாங்க.நமக்கு கொஞ்சம் நெறய ரன் வந்த மாதிரியும் இருக்கும்.கூடுதலா ரெண்டு bowlers கிடைச்ச மாதிரியும் இருக்கும்."மாடு மேய்க்க போன மாதிரியும் ஆச்சு,மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சுன்னு" எங்க ஊரு பக்கம் பழமொழி சொல்லுவாங்க .எப்படி பொருந்துது பார்த்தீங்களா.


பின் குறிப்பு :

இந்த மாட்ச்-ல Andrew Nel பெளலிங்ல ஒரு six அடிச்சுட்டு ஸ்ரீசாந்த் போட்ட டான்ஸ் extra entertainment.

0 comments: