Saturday, January 13, 2007

ஒரு புரோட்டா திங்க முடியுதா இந்த ஊர்ல?.

நானும் இந்த பரந்த Bangalore- ல எவ்வளவோ இடத்துல முயற்சி செஞ்சு பார்ததுட்டேன்.நல்ல புரோட்டா சால்னா சாப்புடணும்னு. ஊஹூம்.நடக்குற காரியமா தெரியலை.இந்த பொன்னுசாமி,அண்ணாச்சி,மால்குடி,அய்யனார் இது மாதிரி கடைக்கு எல்லாம் போனா புரோட்டா குடுத்துட்டு தனியா gravy order பண்ணுங்கன்னு சொல்றாங்க.எங்கயாவது நடக்குமா இந்த அநியாயம்?.எங்க ஊருல எல்லாம் இந்த மாதிரி சொன்னா வெட்டு குத்து ஆகிப் போயிரும்.ஒரு புரோட்டா-வுக்கு சால்னா,ஆம்லெட் வாங்கினா ஸ்பெசல் குழம்பு,அதுக்கு அப்புறம் mutton இல்ல chicken வாங்கினா வருவல் குழம்பு,ஈரல் குழம்பு அப்படின்னு நாலு புரோட்டா வாங்கின புரோட்டாவுக்கு ஒரு குழம்பு வாங்கி சாப்பிட்ட பயக நாங்க.விதியேனு சிக்கன் குழம்பு வாங்கி சாப்பிட்டா அது சாப்பாட்டுக்கு போட்டு சாப்புடுற அளவுக்கு புரோட்டாவுக்கு நல்லா இல்லை."வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு ஜகஜம்" அப்படின்னு நம்ம தலைவர் கைப்புள்ளை மாதிரி சொல்லிட்டு நமக்கு இந்த "speciality restaurant " எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டு நம்ம லோக்கல் B.T.M ,மாருதி நகர்ல சில கடையில முயற்சி செஞ்சு பார்த்தேன்.ஊஹூம் எல்லா இடத்துலயும் காய்கறி எல்லாம் போட்டு vegetarian குருமாதான் கெடைக்குது.அது நம்ம சால்னா மாதிரி இல்லை.சரி அப்படியே ஜெயா நகர், J.P.நகர் ,பசவனகுடி, V.V.புரம் அப்படினு போனா இந்த மாதிரி புரோட்டா கடைகளே இல்லை.நண்பர்களிடமும்,அன்பர்களிடமும் விசாரிச்சதில மத்த இடங்களிலும் கூட சிறப்பா ஒண்ணும் இல்லைனு தெரிஞ்சது.அட கொடுமைக்கு ஓசூர் போய் கூட இது வரைக்கும் ஒரு நாலு அஞ்சு எடததுல சாப்ட்டு பார்த்துட்டோம்."கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம்".அங்கயும் இதே கதைதான்.

புரோட்டா-ன்னா என்ன சாதாரணமான விசயமா?.ஒரு பெரிய குண்டா நெறய மாவு எடுத்து அதுல நடுவுல பெரிய ஏரி மாதிரி குழி தோண்டி அதுல எண்ணை (சில பேரு முட்டையும் ) விட்டு ஒரு அரை மணி நேரம் நல்லா பிசைஞ்சு வச்சுடணும்.அப்புறம் தான் முக்கியமான விசயமே.அதை சின்ன உருண்டையா திரட்டி உருட்டி "பெருமால் மஹாபலிக்கு குள்ளமானவரா இருந்து விஸ்வரூபம் காட்டியது மாதிரி" அந்த சின்ன உருண்டை மாவா இது அப்படினு வியக்கிற மாதிரி பெரிய ரோஸ்ட் தோசை அளவுக்கு வீசணும்.இதில் தான் புரோட்டா மாஸ்டரின் கைவண்ணமே தெரியும். அப்படி வீசுற அழகு இருக்கே.பார்க்க கண் கோடி வேணும். எவ்வளவு மெல்லிசாவும் பெருசாவும் வீசுறாங்களோ அந்த அளவு புரோட்டா மிருதுவாவும்,அடுக்குகளுடனும்(Layers) வரும்.அப்புறம் அதை கல்லில் போட்டு கருகாம எடுத்து நல்ல நாலு பக்கமும் வெறப்பு போக தட்டணும்.இல்லைனா சாமி குத்தம் ஆகிப் போயிடும்(அப்பதான் layers தெரியுங்கறது மற்றும் ஒரு காரணம்).இப்படி வர புரோட்டாவை சும்மா ரெண்டு கையாலயும் சின்ன சின்னதா பிச்சு போட்டு (ஊருல புரோட்டா கொண்டு வர்றவரே அந்த இலவச சேவையும் செய்வார்) அதுல சால்னா ஊத்தி சாப்புடற சுகம் இருக்கே.அடடா அடடா .இந்த புரோட்டாவுக்கு வீச்சு புரோட்டா,முட்டை புரோட்டா,கைமா புரோட்டா,கொத்து புரோட்டா,கறி புரோட்டா இப்படி இன்னும் நிறைய பங்காளிகள் இருக்காங்க .இருந்தாலும் வெறும் புரோட்டாவை பிச்சு போட்டு சால்னா ஊத்தி சாப்புட்டறதுதான் உச்ச பட்ச சுகம்.


இந்த Bangalore-ல ஒரு விசாரணை கமிஷன் வச்சாவது நல்ல புரோட்டா சால்னா எங்க கெடைக்குதுன்னு கண்டு பிடிக்ணும்பா.இல்லைனா "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" -னு நம்ம முன்னோர்கள் சொன்ன மாதிரி "நல்ல புரோட்டா சால்னா கிடைக்காத ஊரில் வேலை பார்க்க வேண்டாம்" -னு வேற ஊரை பார்க்க போயிரணும்.

4 comments:

Unknown said...

நீங்க பெங்களூரில இதெல்லாம் கிடைக்கலன்னு வருத்தப் பட்டுக்கிட்டு இருக்கைங்க.
அவனவன் தேனி நாகர் கடையில அந்த காலத்துல சாப்ட்ட சால்னாவை நெனச்சு ஏங்கிட்டு இருக்கோம்.
அதெல்லாம் திண்டுக்கல்லை தாண்டி வடக்கே கிடைக்காது.
உங்கள் பதிவுகள் பலவற்றை இன்றுதான் பார்த்தேன். நல்லா எழுதுறீங்க.
தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்

Unknown said...

நீங்க பெங்களூரில இதெல்லாம் கிடைக்கலன்னு வருத்தப் பட்டுக்கிட்டு இருக்கைங்க.
அவனவன் தேனி நாகர் கடையில அந்த காலத்துல சாப்ட்ட சால்னாவை நெனச்சு ஏங்கிட்டு இருக்கோம்.
அதெல்லாம் திண்டுக்கல்லை தாண்டி வடக்கே கிடைக்காது.
உங்கள் பதிவுகள் பலவற்றை இன்றுதான் பார்த்தேன். நல்லா எழுதுறீங்க.
தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்

vijay said...

Madhan, entha blog super, totally agreed...

Subramanian Vallinayagam said...

hi

this is subramanian working in IT
me 2 feel the same as u when i was in chennai before 1 year .....

pathivu nanRaaga irukuirathu...
valthukkal...

now i move to blore this month only.... and im in maruthi nagar madiwala only........