Wednesday, January 24, 2007

பேனா நட்பும் வலைப்பூக்களும்

இந்த தமிழ்ப் பதத்தை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா?.சும்மர் 20 வருடங்களுக்கு முன்பு மிக பிரபலமாக இருந்த ஒரு விஷயம்.ஒரு விதத்தில் மிக ஆரோக்கியமாக இருந்த விஷயம் கூட.பேனா நண்பர்கள் குழுக்கள் எல்லா பிரபல பத்திரிக்கைகளிலும் அவர்கள் விலாசங்களுடன் பிரசுரம் செய்வார்கள்.புதிய நட்புகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் அவர்கள் முகம்,குலம் , இனம்,மொழி அறியாமல் அவர்களின் ஒத்த கருத்துகளுக்காகவும் ,குணத்துக்காகவும் அமையும்.முகம் அறியா நண்பர்களுடன் பல விதமான விஷயங்களை பேசுவதுடன் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் நமக்கு நண்பர்கள் உள்ளனர் என்ற ஒரு சந்தோஷமான என்ணத்தையும் கொடுத்தனர் இந்த பேனா நண்பர்கள்.இந்த பேனா நட்பின் மூலம் வேலை கிடைப்பது மற்றும் பல விதமான
உதவிகளும் கிடைத்து பயன் பெற்றவர்களும் உண்டு.இவர்களில் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்க்கவே கூடாது என்று உறுதி எடுத்து கொண்டும் நீண்ட காலம் நட்பு கொண்டவர்களும் உண்டு.

சரி இப்போ எதுக்கு இந்த பேச்சு என்று கேட்கிறீர்களா? .இந்த வலைப்பூக்களில் (blog) உலாவும் போது பேனா நட்புக்கும் வலைப்பூ நட்புக்கும் உள்ள நிறைய ஒற்றுமைகள் புரிந்தது.இதை சிறிது தொழில்நுட்ப முன்னேற்றமடைந்த பேனா நட்பு என்று சொல்லலாமா தெரியவில்லை .சில வித்தியாசங்கள் இருக்கின்றன.வ.பூ ல் சிலர் முகம் தெரியும் ,மற்றும் வலை பூ பதிவாளரின் பதிவுகளை பார்க்க அவர் அனுமதி தேவை இல்லை.பேனா நட்பில் மற்றவர் அனுமதியும் வேண்டும்.வலைப்பூவில் கொஞ்சமாவது கணினி பயிற்சி
பெற்றவர்கள் மட்டுமே கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.பேனா நட்பில் அப்படியில்லை.இப்படி நிறைய ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லி கொண்டே போகலாம்.ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல.

பேனா நட்பு "பேணா நட்பாகி" போய் விட்ட இந்த நாகரிக உலகத்தில் வலைப்பூ பேனா நட்பு விட்டு சென்ற இடத்தில் இருந்து அந்த நோக்கத்தை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது என்பது தான் நான் சொல்ல விரும்புவது.மேலும் இது மக்களுக்குள் இருக்கும் எழுத்து திறமை, கற்பனை, நகைச்சுவை,உதவும் மனப்பான்மை போன்ற பலவற்றையும் வெளிக்கொணர்வதால் இந்த concept -ஐ கண்டு பிடித்தவர்க்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு நானும் ஒரு வலைப்பூ பதிவாளன் என்ற பெருமையோடு எனது இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.(யாருப்பா அது அங்க "கருத்து சொல்றதை நிறுத்துங்கப்பா" அப்படின்னு மொணங்குறது)

2 comments:

said...

Hi,
This is narmadha , doing final MCA. I liked ur blog on "Pena Natpum Valai Pookalum"(Sorry enkitta tamil font illa!!!) This one was really very nice... Actually enakkum ippadi oru idea irundadhu!!!"Pena nanbargal" gara varthai kooda kaetkama niraya per innaiku irukkanga.... Avangalukku ellam inda madhiri oru valai poo oru gift endru kooda sollalam... Ippadi oru blog publish panni pala perukku appadi oru vishyam irundhada nyabaga padutheetinga!!! It was really nice!!!