Tuesday, January 09, 2007

என் கேள்விக்கென்ன பதில்?

சமீபத்தில் நம்ம வெட்டிப்பயல் வலைப்பூவின் மூலம் நண்பர் கைப்புள்ள-யின் சித்தூர்கட் செலவு தொடர் படிச்சிட்டு இருந்தப்ப நம்ம சிற்றறிவுக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது .வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில இருக்குற மாதிரி நம்ம தமிழ்நாட்டுல ஏன் ஒரு கோட்டையோ ,அரண்மனைகளோ இல்லை?.ஹைதராபாத்-ல கோல்கொண்டா கோட்டை இருக்கு.கர்நாடகால பிஜப்பூர் கோட்டை ,மைசூர் அரண்மனை இப்படி இன்னும் நெறய இருக்கு.கேரளால திருப்பணித்துறா அரண்மனை,கொச்சின் அரண்மனை இப்படி நெறய இருக்கு.ஆனா நம்ம தமிழ்நாட்டுல ஏன் அப்படி ஒண்ணும் இல்லை?.நம்ம ராஜாக்களும் பெரிய பெரிய அரண்மனைகள் கட்டி அதுல பொன் விதானம் எல்லாம் வேய்ஞ்சு வாழ்ந்ததா படிச்சு இருக்கோம்.இத்தனைக்கும் சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்கள் கட்டிட கலையில் சிறந்தவங்களா இருந்திருக்காங்க.பாண்டியர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்,சோழர்களுக்கு தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்,பல்லவர்களுக்கு மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோவில்கள் அவங்களோட கட்டிட கலை சிறப்புக்கு ஆதாரமா இருக்கு.மேலும் முகலாய மன்னர்களோ வேற்று மன்னர்களோ தமிழ்நாட்டுக்குள்ள அவ்வளவா படை எடுத்து வரவே இல்லை.கர்நாடகாவுல பேளூர்,ஹலேபேடு கோவில் எல்லாம்வேற்று மன்னர்கள் படை எடுப்பால நெறய சேதாரம் ஆகி இருக்கு.ஹலேபேடு அரண்மனை அழிஞ்சே போச்சு.ஆனாலும் அங்க மைசூர் அரண்மனை இன்னும் ரொம்ப நல்ல நிலைமையில இருக்கு.நம்ம தமிழ்நாட்டுல கோட்டைனு சொல்லணும்னா திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை,வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை இதைத்தான் சொல்ல முடியும்.இதை எல்லாம் கோட்டைனு சொல்ல கூடாது கோட்டை சிதிலங்கள் அப்படினுதான் சொல்லணும்.அரண்மனைனு சொன்னா தஞ்சை மராத்திய மன்னர்கள் அரண்மனை சொல்லலாம்.அப்படின்னா சோழ,பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை எல்லாம் எங்கே?.வேற்று நாட்டு மன்னர்கள் படை எடுத்து வந்து அழிச்சதா நம்மகிட்ட சரித்திர ஆதாரம் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை.காலப்போக்கில் அழிஞ்சிருந்தாலும் இருந்த எல்லா அரண்மனை,கோட்டையுமா அழிஞ்சுடும்.மன்னர்ககள் கட்டிய கோவில்கள் எல்லாம் இன்னும் ரொம்ப நல்லா இருக்கே?.அது எப்படி?.அந்த கோட்டைகளும்,அரண்மனைகளும் என்ன ஆச்சு?.யாருக்காவது இதை பத்தி ஏதாவது தெரிஞ்சா இல்லை இதை பததி ஏதாவது லிங்க் இருந்தா என் குழப்பத்தை தீர்த்து வைங்கப்பா.

0 comments: